Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ரூ.209 கோடியாக குறைக்கப்பட்ட சிட்டி யூனியன் வங்கி GST நிலுவை!

ரூ.209 கோடியாக குறைக்கப்பட்ட சிட்டி யூனியன் வங்கி GST நிலுவை!

ரூ.110.37 கோடி வரியாகவும், ரூ.98.52 கோடி வட்டி மற்றும் அபராதமாகவும் சேர்த்து ரூ.208.91 கோடி செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்ட தனியார் வங்கியான சிட்டி யூனியன் வங்கிக்கு, புதிய மதிப்பீட்டின் கீழ் ஜிஎஸ்டி நிலுவை, அபராதம் மற்றும் வட்டி ரூ.208.91 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தின் கீழ் 2021-22-ம் நிதியாண்டில் முதலீடுகள் மீதான வட்டி, பத்திரங்கள் விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் லாபம் மற்றும் அந்நியச் செலாவணி பரிவர்த்தனை மூலம் கிடைக்கும் லாபம் , உள்ளீட்டு வரிப் பயன் உள்ளிட்டவை தொடர்பாக, சிட்டி யூனியன் வங்கிக்கு கடந்த ஆண்டு டிசம்பரில் ஜிஎஸ்டி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். அதில், வரி நிலுவை, அபராதம், வட்டி உள்ளிட்டவை சேர்த்து ரூ.331.79 கோடி செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

 

இது தொடர்பாக வங்கி சார்பில் முறையிடப்பட்ட நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, இந்த விவகாரத்தை மறுபரிசீலனைக்கு அனுப்பியது தொடர்ந்து, மாநில ஜிஎஸ்டி துணை ஆணையர் புதிய மதிப்பீட்டு உத்தரவைப் பிறப்பித்துள்ளார். 

இதன்படி, ரூ.110.37 கோடி வரியாகவும், ரூ.98.52 கோடி வட்டி மற்றும் அபராதமாகவும் சேர்த்து ரூ.208.91 கோடி செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 டிசம்பர் 29-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் ரூ.191.05 கோடி வரியும், ரூ.143.73 கோடி வட்டி மற்றும் அபராதமும் சேர்த்து ரூ.337.79 கோடி செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் சிட்டி யூனியன் வங்கி தெரிவித்துள்ளதாவது: ஜிஎஸ்டி தொடர்பான புதிய உத்தரவு அக். 14-ல் கிடைத்தது. ஜிஎஸ்டி தாக்கல் படிவமான ஜிஎஸ்டி ஆர்– 9 சி-ல் வங்கி சமர்ப்பித்த வருவாய் மற்றும் கணக்கு விவரங்களுக்கான ஒப்பீட்டு அறிக்கையை ஜிஎஸ்டி அதிகாரிகள் ஏற்கவில்லை. அந்த அறிக்கை நிதிநிலை அறிக்கைகளுடன் ஒத்துப்போவதுடன், சட்டப்பூர்வ மத்திய தணிக்கையாளர்களின் சான்றிதழ் அதற்கு ஆதாரமாக இருக்கிறது.

பொருந்தக்கூடிய ஜிஎஸ்டி விதிமுறைகளைப் பின்பற்றியுள்ளோம். தகுதியான வாடிக்கையாளர் கட்டணங்களுக்கு வரி செலுத்தியுள்ளோம்., விதிகளின்படி அனுமதிக்கப்பட்ட உள்ளீட்டு வரிப் பயனை மட்டுமே கோரியுள்ளோம்.

மேலும், எங்களது கணக்குப் புத்தகங்களில் வருமான வரி ஏய்ப்பு எதையும் ஜிஎஸ்டி தணிக்கை கண்டறியவில்லை. இந்த கோரிக்கை சட்டரீதியாக ஏற்கத்தக்கதல்ல.பிழைகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. எனவே, ஜிஎஸ்டி சட்டத்தின்கீழ் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம். எனினும், வங்கியின் நிதிநிலையில் இந்த விவகாரம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. இவ்வாறு வங்கி தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி
தீபாவளிக்கு பாமாயில் விநியோகம் - உயர்நீதிமன்றம் உத்தரவு
அடுத்த செய்தி
ஹோர்முஸில் மூழ்கிய கப்பல்! கடலில் மிதக்கும் ஐபோன்கள்

தொடர்புடைய செய்திகள்